புதிய வர்த்தகர்கள் கவனிக்க வேண்டிய 8 முக்கியமான காரியங்கள் - Trade Achievers

புதிய வர்த்தகர்கள் கவனிக்க வேண்டிய 8 முக்கியமான காரியங்கள்

 In Trading

மக்கள் இப்பொழுது முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை புரிந்திருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் செலவிடுவதை பார்க்கிலும் முதலீடு செய்வதில் அதிக விருப்பத்தை காண்பிக்கிறார்கள். இப்பொழுது விசேஷமாய் இந்த சர்வதேச பரவல் பிறகு அநேக மக்கள் இந்த பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். இந்த வலைப்பதிவில் நாம் ஒரு புதிய வர்த்தகர் இந்த பொருளாதார சந்தைக்கு வருவதற்கு முன்பு அவர் கவனிக்க வேண்டிய 8 முக்கியமான விஷயங்களை பார்க்க போகிறோம்.

உங்களைப் புரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய தேவைகளை அறிந்து கொள்ளுங்கள்

முதலாவது, நாம் ஏன் பொருளாதார வர்த்தகத்திற்குள் வர்த்தகம் செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களை நான், நீங்கள் ஏன் இந்த பொருளாதார வர்த்தகத்தில் வர்த்தகம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் எல்லோரும் சொல்லக்கூடிய ஒரே பதில் லாபம் பார்ப்பதுதான் லாபம் சம்பாதிப்பதுதான் என்று சொல்லுவீர்கள். எல்லோரும் இங்கு லாபம் சம்பாதிப்பதுதான் இருக்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பு நாம் இந்த பொருளாதார வர்த்தகத்தை எப்படி அணுகப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நான் அனேக மக்களை கடந்து வந்திருக்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் முதல் சில இழப்புகளை அல்லது சில தோல்விகளை அவர்கள் கண்டவுடன் உற்சாகமிழந்து போய்விடுவார்கள். அவர்களுக்கு அவர்கள் ஏன் பொருளாதார சந்தையில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அந்த பொருளை அறியாமல் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் நீங்கள் உங்களையும், உங்களுடைய தேவைகளையும் புரிந்து கொள்ளும் பொழுது உங்களுக்குத் தேவையான ஊக்குவித்தல் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்

 

சில மக்கள் இந்த வர்த்தகத்தை தங்களுடைய பகுதி வேலையாக எடுத்து செய்வார்கள் அவர்களுக்கு இன்னொரு வருமானம் ஒரு மாற்று வருமானம் வர வேண்டும் என்பதற்காக செய்வார்கள். சிலர் இந்த வர்த்தகத்தை (Trading) முழு நேர வேலையாக எடுத்துச் செய்வார்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் படியாக செய்கிறார்கள். சிலர் ஸ்விங் டிரேடிங் (Swing Trading) மாத்திரம் செய்ய விரும்புவார்கள் சிலர் இன்ட்ரா டே (Intraday Trader) ஆக இருக்க விரும்புவார்கள் ஆகவே இங்கே மிகவும் முக்கியமான கேள்வி என்னவென்றால் நீங்கள் எவ்விதமான ஒரு வர்த்தகராக இருக்கப் போகிறீர்கள் அதற்கு தான் எல்லோருக்கும் பதில் வேண்டும் இது நாம் அந்தப் பங்கு சந்தையை எப்படி அணுகப் போகிறோம் நாம் எவ்விதமான பங்குகளை தெரிந்து கொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும்

பொருளாதார சந்தையை புரிந்து கொள்ளுங்கள்

இரண்டாவது விஷயம் என்னவென்றால், பொருளாதார சந்தைகளையும், அங்கே இருக்கும் பங்குகளையும், மற்றும் பிற அளவுருக்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்பும் பங்குகளைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், பொருளாதார சந்தை உங்களுக்கு இலவச பணத்தை வழங்காது, நீங்கள் முயற்சிகள் செய்ய வேண்டும்,

வர்த்தகத்தில் வெற்றிபெற ஒருபோதும் குறுக்குவழிகளை நாட வேண்டாம். உங்கள் அணுகுமுறை, நீங்கள் தீர்மானித்தபடி நீங்கள் எந்த பங்குகளை வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும். பொருளாதார சந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது சூழ்நிலைகளைப் பொறுத்து எந்த பங்குகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆப்ஷன்ஸ் (options) வர்த்தகம் செய்ய விரும்பினால், அவை எவ்வாறு செயல்படுகின்றன, எந்த சந்தை நிலைமைகளில் அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்-உள்ளுணர்வு:

புதிய வர்த்தகர்களுக்கான மூன்றாவது முக்கியமான விஷயம் என்னவென்றால், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நீங்கள் கற்றுக்கொண்டவை வர்த்தகத்திற்கு உங்களுக்கு உதவாது என்பதை புரிந்துகொள்வது. நாம் பள்ளியில் இருந்தபோது, சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு நாம் கடினமாக உழைக்கக் வேண்டும், அதாவது, நாம்  கடினமாக உழைத்தால், அதிகமாக பணம் சம்பாதிக்கலாம். நாம் அதிக மதிப்பெண்களைப் பெற்றால், சிறந்த வேலை கிடைக்கும். இவ்விதமாக நாம் கற்பிக்கப்பட்டோம், ஆனால் அது வர்த்தகத்திற்கு வரும்போது அப்படி இருக்க அவசியமில்லை. பல வெற்றிகரமான வர்த்தகர்கள் அதிக லாபத்திற்காக குறைந்த எண்ணிக்கையிலான வர்த்தகங்களை எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள், அதே நேரத்தில் புதிதாக வர்த்தகம் செய்பவராகள் அதிக பணம் சம்பாதிக்க அதிக வர்த்தகங்கள் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் ரகசியம் என்னவென்றால் குறைவாக வர்த்தகம் செய்வதுதான், வெற்றியாளர்களை ஓடவிடுவது, தோற்றவர்களை வெட்டிவிடுவது.

உங்கள் தேவைகளை ஆராய்ந்து பாருங்கள், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:

அடுத்த விஷயம் என்னவென்றால், நாம் நம்முடைய செலவினங்களை அறிந்துகொள்ள வேண்டும். இங்கே நான் பணத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, நேரம் மற்றும் முயற்சிகளைப் பற்றி பேசுகிறேன். ஆடம்பரமான குறிகாட்டிகள், மென்பொருள் மற்றும் ரோபோக்களை வாங்க பல புதிய வர்த்தகர்கள் பெரியளவில் பணத்தை செலவிடுகிறார்கள். அதிக லாபம் ஈட்டுவதற்கு விலையுயர்ந்த குறிகாட்டிகள் உதவுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மனநிலையில்தான், பல புதிய வர்த்தகர்கள் வெவ்வேறு குறிகாட்டிகளைப் பயன்படுத்துகின்றனர், இதனால் அவர்களின் விளக்கப்படங்கள் (Charts) மிகவும் குழப்பமாயிருக்கிறது. இதை நினைவில் கொள்ளுங்கள், விளக்கப்படம்(Charts) எவளவளுக்கு எளிமையாயிருக்கிறதோ, புதிய வர்த்தகர்களுக்கு அது மிக சிறந்ததாய் இருக்கும். ஒரு புதிய வர்த்தகர் அவர்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் உளவியல் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எதற்கு அதிகாரம் கொடுக்கிறீர்களோ (எண்ணங்களும் செயல்களும்) அது தான் உங்களை ஆளும்.

திட்டம் இல்லாமல் ஒருபோதும் வர்த்தகம் செய்ய கூடாது:

ஒரு வர்த்தகர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஐந்தாவது முக்கியமான விஷயம் அவர்களின் வர்த்தக திட்டம். உங்கள் வர்த்தகத்திற்கு நீங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளை உருவாக்க வேண்டும். உங்கள் திட்டத்தில் ஒரு வர்த்தகத்தில் நுழைந்து வெளியேறுவதற்கு சரியான விதிகள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை உருவாக்கும் போது, இடர் மேலாண்மை (Risk Management) மற்றும் பண மேலாண்மைக்கு (Money Management) நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் பணயம் வைக்கப் போகும் பணத்தை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள், உங்கள் நிறுத்த இழப்புகளை (Stop Loss) எப்போதும் வைத்திருங்கள். இந்த திட்டத்தை நீங்கள் எந்த நிலையிலும் உடைக்கக்கூடாது.

 

விஷயங்களை எளிமையாக வைத்திருங்கள்:

அடுத்த விஷயம் என்னவென்றால், பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள், அவர்கள் அதிக பணம் சம்பாதிக்க சிக்கலான அமைப்புகளில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று. சிக்கலான அமைப்புகளில் வர்த்தகம் செய்வதற்காக யாரும் உங்களுக்கு வெகுமதி அளிக்கப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் லாபம் ஈட்ட எளிய அமைப்புகளில் வர்த்தகம் செய்யலாம். ஒரு அந்நியன் உங்கள்மீது செல்வாக்கு செலுத்த அனுமதிப்பீர்களா? அனுமதிக்கமாடீர்கள், சரியா. இதேபோல், நீங்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு அமைப்புகளில் வர்த்தகம் செய்ய வேண்டாம். அறிமுகமில்லாத அமைப்புகளில் வர்த்தகம் செய்வதையும், பணத்தை இழப்பதையும் விட, அமைதியாக இருப்பது எப்போதும் நல்லது. நீங்கள் வர்த்தகம் செய்யும் போது ஒருபோதும் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். உங்களை விட வேறு யாரும் உங்களைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்.

மீண்டும்  மீண்டும் சோதனை செய்து உங்கள் நுணுக்கம் அல்லது தந்திரத்தை கண்டறியவும்:

ஏழாவது கருத்து உங்கள் நுணுக்கம் அல்லது தந்திரம், உங்கள் வர்த்தக நுணுக்கம் உங்கள் வர்த்தகத்தில் தனித்துவமான அம்சத்தை பெற்றுள்ளது, இது உங்களுக்கு நேர்மறையான எதிர்பார்ப்பை அளிக்கிறது. இது உங்கள் வெற்றி விகிதம் (Hit Rate) அல்லது வெகுமதி அளிக்கும் அபாயமாக (Risk to Reward) இருக்கலாம். இது ஒரு பகுப்பாய்வு நுணுக்கம் அல்லது தந்திரமாய் இருக்கலாம். சிறிய அளவில் மீண்டும் சோதனை செய்வதன் மூலம் உங்கள் நுணுக்கம் அல்லது தந்திரத்தை கண்டறியலாம். நேரடி சந்தையில் (Live Market) வர்த்தகம் செய்வதன் மூலம் உங்கள் தகவல்களை  நீங்கள் சோதிக்க வேண்டும், ஏனெனில் இது உணர்ச்சி ரீதியாக உங்களை ஆயத்தப்படுத்த உதவும். காகித வர்த்தகம் (Paper Trading) பரிந்துரைக்கப்படுவுதில்லை, ஏனென்றால் அதில் உங்களுக்கு அந்த உணர்ச்சிக்களை கட்டுப்படுத்தும் காரியேமே இல்லை. உங்கள் நுணுக்கம் அல்லது தந்திரத்தை நீங்கள் முடிவு செய்தவுடன், அதை உங்கள் வர்த்தக திட்டத்தில் இணைக்க வேண்டும். இந்த நுணுக்கம் அல்லது தந்திரத்தை தான் நீங்கள் சந்தைகளில் வர்த்தகம் செய்ய காரணமாக இருக்க வேண்டும்.

உங்கள் வர்த்தகங்களை பதிவு செய்யுங்கள்:

எட்டாவது கருத்து என்னவென்றால், நீங்கள் உங்கள் வர்த்தகங்களை பதிவு செய்ய வேண்டும், காரணம் நுழைவு (Entry), வெளியேறுதல் (Exit) மற்றும் இழப்பீடு நிறுத்தல் (Stop Loss) ஆகியவற்றை கவனிக்க அந்த பதிவுகள் பிற்காலத்தில் உதவும். நம்முடைய பதிவேட்டில் நம்முடைய உணர்சசிகளையும் பதிவு செய்ய வேண்டும். நம்முடைய  உணர்ச்சி மற்றும் பகுப்பாய்வு நுணுக்கத்தை வளர்க்க நம்முடைய வர்த்தக பதிவுகளை  அடிக்கடி பார்வையிட வேண்டும். இந்த விஷயம் புதிய வர்த்தகர்களிடமிருந்து நிபுணர்களைப் பிரிக்கிறது.

 

 

Recent Posts

Leave a Comment

0
0

Start typing and press Enter to search