வளர்ச்சி பங்குகள் VS மதிப்பு பங்குகள் - Trade Achievers

வளர்ச்சி பங்குகள் VS மதிப்பு பங்குகள்

 In Trading

உங்கள் பங்குகளை மளிகை பொருட்களை வாங்குவது போல் வாங்குங்கள் வாசனை திரவியங்கள் போலல்ல (Perfumes)” என்று பெஞ்சமின் கிரஹாம், மதிப்பு முதலீட்டின் தந்தை நமக்கு மதிப்பிடமுடியாத ஆலோசனை தருகிறார். அந்த ஆலோசனையானது அனேக மக்களால் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் மூடப்பட்டிருக்கிறது. இந்த வலைப்பதிவில் நாங்கள் உங்களுக்கு அங்கே மேலே சொல்லப்பட்ட அந்த அந்த மேற்கோளுக்குள் மறைந்திருக்கிற பொருளையும் நீங்கள் உங்கள் “மளிகை பொருட்களை” எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப் போகிறோம்

இப்போது நம்முடைய வீட்டிற்கு மளிகை பொருட்களை வாங்கும்போது நம்முடைய சுபவாத்தை ஆராய்ந்து பார்ப்போம், முதலில் நாம் என்ன செய்வோம்? நாம் பொருளின் தரத்தை ஆராய்வோம், அதன் பின்பு அதன் விலையை கேட்போம், ஏனென்றால் நாம் நம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியத்தை முக்கியத்துவமாக வைப்போம். ஆனால் நாம் வாசனை திரவியங்களை வாங்கும் பொழுது நாம் அதனுடைய தரத்தையோ அல்லது அதனுடைய விலையையோ நாம் முக்கியத்துவம் படுத்தமாட்டோம் ஏனென்றால் நமக்கு தேவையானதெல்லாம் அந்த வாசனை திரவியத்தின் வாசனையும் கவர்ச்சியும் தான்.

பங்குகளை குறித்ததான கவர்ச்சியான செய்திகளுக்கு ஏமாந்துவிடாமல் நாம் மளிகை பொருட்களை எப்படி ஆராய்ந்து அறிந்து வாங்குகிறோமோ, அதேபோல் பங்குகளையும் ஆராய வேண்டும் என்று பெஞ்சமின் கிரஹாம் கற்றுக் கொடுக்கிறார். இப்பொழுது நமக்கு பெஞ்சமின் கிரஹாம் சொல்லிய வாக்கியத்தின் பொருள் புரிந்தது, பங்குகளை எப்படி ஆராய வேண்டும் என்பதை திரும்பிப்போய் பார்ப்போம். இங்கேயும் பெஞ்சமின் கிரகம் “எவ்வளவு” என்று கேட்க கற்றுக் கொடுக்கிறார்.

நாம் ஆராய்வதற்கு முன்பு, பங்குகள் எத்தனை வகைப்படும் என்பதை பார்ப்போம். அதில் முதலாவது வளர்ச்சி பங்குகள் அடுத்த ஒன்று மதிப்பு பங்குகள். இப்பொழுது அந்தப் பங்குகளில் தன்மைகளைப் பார்ப்போம்.

வளர்ச்சி பங்குகள்

வளர்ச்சி பங்கு என்பது தொடர்ச்சியாக நல்ல வருமானம் தந்து கொண்டிருக்கிற நிறுவனத்தின் பங்காகும். இந்தப் பங்குகள், இந்த துறையிலும், பங்குசந்தையிலும் சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கையுடன், அனேக மக்கள் இந்த பங்குகளுக்குதான் ஆட்டு மந்தையைப் போல் திரண்டு வருவார்கள். இந்தத் தன்மைதான் பங்குகளின் விலையை அதிக அளவிற்கு தள்ளுகிறது.

இந்த நிறுவனங்கள்  ஈவுத்தொகையோ (Dividends) அல்லது எந்த வித பலன்களையும் அல்லது நன்மைகளையும் அளிப்பதில்லை, ஏனென்றால் இந்த நிறுவனங்களின் முக்கிய நோக்கமே பங்குகளின் விலையை உயர்த்துவதுதான். இவர்கள் தங்கள் லாபத்தை இந்த வியாபாரத்தில் திரும்பவும் முதலீடு செய்வார்கள். இந்த பங்குகளில் அதிக மக்கள் முதலீடு செய்வதால் இந்தப் பங்குகள் செய்திகளால் எளிதில் பாதிப்படையத்தக்கதாயும் விலை நகர்வு அதிகம் உடையதாகவும் இருக்கும்

Value Stocks

இந்த பங்குகளை கண்டறிதல்:

அனைத்து பங்கு முதலீட்டாளர்களும் இந்த வார்த்தை (PE RATIO) (விலை சம்பாதிப்பு விகிதம்) கடந்து வந்திருப்பார்கள். ஆனால் நம்மில் அநேகருக்கு இந்த வார்த்தையின் அர்த்தம் அறியாதவர்களாய் இருக்கிறோம். PE RATIO (விலை சம்பாதிப்பு விகிதம்)  என்பது ஒரு பங்கின் வருமானத்திற்கும் ஒரு பங்கின் விலைக்கும் உள்ள விகிதம் ஆக இருக்கிறது. இப்படி சொல்லலாம், ஒரு பங்கானது 10 ரூபாய் வருமானத்தை உங்களுக்கு தருகிறது நீங்கள் அந்த பங்கை 100 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் அந்த பங்கின் சம்பாதிக்கும் திறனை (Earnings Capacity). விட பத்து மடங்கு செலுத்துகிறீர்கள்.

 

நாம் இன்னொரு ஒரு எடுத்துக்காட்டை பயன்படுத்துவோம்,

இப்பொழுது இங்கே இரண்டு பங்குகள் உள்ளது “A” மற்றும் “B”, அது இரண்டும் 50 ரூபாய்க்கு வர்த்தகமாதிக் கொண்டிருக்கிறது, வெளித்தோற்றத்தில் இரண்டும் ஒரே விலையில் இருப்பது போல காணப்படுகிறது, இப்போது நாம் பெஞ்சமின் கிரஹாமை அழைப்போம், இப்பொழுது “எவ்வளவு”? என்று கேட்போம். இதில் பங்கு “A” விற்கு PE RATIO (விலை சம்பாதிப்பு விகிதம்) 10, பங்கு “B” விற்கு PE RATIO (விலை சம்பாதிப்பு விகிதம்) 15. இதில் என்ன பொருள்படுகிறது என்றால், பங்கு “A” தன்னுடைய சம்பாதிக்கும் திறனை விட 10 மடங்கு அதிகமாக வியாபாரமாகி கொண்டிருக்கிறது அதே நேரத்தில் பங்கு “B” தன்னுடைய சம்பாதிக்கும் திறனை விட 15 மடங்கு அதிகமாக வியாபாரமாகி கொண்டிருக்கிறது. ஒரு முதலீட்டாளர் இந்த பங்கை தான் வாங்க முற்பட வேண்டும் ஏனெ்றால் அது தன்னுடைய மதிப்பை விட குறைவுள்ளதாக இருக்கிறது

.

அனேக முதலீட்டாளர்கள் பின்பற்றும் இன்னொரு அணுகுமுறை,

 

ஒரு பங்கின் விலை சம்பாதிக்கும் திறனை “PE” அதே துறையில் இருக்கும் மற்றொரு பங்கின் விலை சம்பாதிக்கும் திறனோடு ஒப்பிடுவது. இப்படி சொல்லலாம், ஒரு துறை எடுத்துகாட்டிற்கு பார்மா(Pharma) அது 35 விலை சம்பாதிக்கும் திறன் விகிதத்தில் வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது அதே நேரத்தில் ஒரு வலுவான பார்மா நிறுவனம் அது 25 விலை சம்பாதிக்கும் விகிதத்தில் வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது, அனேக முதலீட்டாளர்கள் இந்த இரண்டாவது சொல்லப்பட்ட பங்கை தான் வாங்க முயற்சிப்பார்கள் ஏனென்றால் அது தன்னுடைய மற்ற நிறுவனங்களை காட்டிலும் விலை குறைவாக இருக்கிறது.

 

நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாக:

 

1) முதலீடு என்று சொன்னாலே அது பொருளாதார வலிமையான நிறுவனத்தில் செய்யப்பட வேண்டும், அது வளர்ச்சி முதலீடாக இருந்தாலும் சரி அல்லது மதிப்பு முதலீடாக இருந்தாலும் சரி

2) மதிப்பு பங்குகள் அனேக நேரங்களில் விலை குறைவான பங்குகளோடு தவறாக ஒப்பிடப்படுகிறது, பலவீனமான பங்குகள் அனேக நேரங்களில் குறைவான விலையில் தான் வியாபாரமாகும் அதேபோல் அவைகள் மதிப்பீடு முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்காது.

3) நாம் ஒரு பங்கை வாங்குவதற்கான திட்டம் போடுவதற்கு முன்பு அந்தப் பங்கு எந்த ட்ரெண்டில்(Trend) உள்ளது என்பதை அறிந்துகொள்ளவேண்டும் இவைகளைப் புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வது அபாயகரமாக முடியும்.

Recent Posts

Leave a Comment

0
0

Start typing and press Enter to search